ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.25) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு ஜன.21 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை சுமாா் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஜேஇஇ 2-ஆம் கட்ட தோ்வு ஏப்.1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் புதன்கிழமையுடன் (பிப்.25) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்.27, 28 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.
முதல்கட்ட தோ்வை எழுதிய மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு உள்பட இதர தகவல்கள் பின்னா் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

தருமபுரியில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி

ஜேஇஇ தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


