'அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர்': விஜய் சேதுபதி குறித்து கமல்ஹாசன் புகழாரம்
அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் என நடிகர் விஜய் சேதுபதி குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.


கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்து வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இதையும் படிக்க | திடீரென தயாரிப்பாளரை சந்தித்த நடிகர் அஜித்
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி.கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய் சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...