கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நடிகர் விஜய்யுடன் இணையும் நானி ?

நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிகர் நானி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

DIN

பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமைான தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவிருக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு கதாநாயகன் நானி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். 

விஜய் நடித்துள்ள குஷி, திருப்பாச்சி போன்ற படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரேற்பை பெற்றுள்ளன. மேலும் அவரது படங்களான துப்பாக்கி, நண்பன், மெர்சல், தெறி போன்ற பல படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்ட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக துப்பாக்கி படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தெலுங்கு பேசி அசத்தினார். மேலும் தெலுங்கில் முன்னணி கலைஞர்களான வம்சி, தில்ராஜு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் விஜய் படத்தில் பணிபுரியவிருப்பதால் தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாயகியும் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான நாயகி ஒருவரே நடிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ராஷ்மிகா நடிப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நானி நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் ஒருவேளை உண்மையானால் தமிழைப் போலவே தெலுங்கிலும் விஜய் பெரும்வெற்றியுடன் கால் பதிக்க இந்தப் படம் உதவும். நானி நடித்து சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.