டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஒரே படத்தில் இத்தனை பேரா?: கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு வெறித்தனமான கமல்ஹாசன் ரசிகர். அவரது 'மாநகரம்' படத்தில் சந்தீப் கிஷன் வேடத்தை கமல்ஹாசனின் சத்யா படத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்ததாகவும், 'கைதி' படத்தை 'விருமாண்டி' படத்தின் பாதிப்பில் உருவாக்கியதாகவும் அவரே தெரிவித்திருக்கிறார். மேலும் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் கூட கமல்ஹாசனின் 'நம்மவர்' படத்தின் பாதிப்பில் உருவானது தானாம். 

Story image

ரஜினிகாந்த்தை வைத்து அவரது ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் எப்படி பெரும் வெற்றி பெற்றதோ, அதே போல லோகேஷ் இயக்கும் விக்ரம் படமும் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. அதற்கேற்றார் போலவே 'விக்ரம்' படத்தின் டீசரும் அமைந்திருந்தது. ஆரம்பிக்கலாங்கலா? என டீசரில் கமல் பேசிய ஒற்றை வசனம் மிக பிரபலமானது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் 'கோலி சோடா 2' படத்தின் மூலம் பிரபலமாகியிருந்தார். மலையாளத்தில் 'ஜல்லிக்கட்டு', 'ஈ.மா.யூ', 'சார்லி' போன்ற பல படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அவர் தற்போது 'விக்ரம்' படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

'விக்ரம்' படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், 'அஞ்சாதே' நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சர்கார் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.