கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விஜய் ஆண்டனி பிறந்த நாளன்று அறிவிக்கப்படவுள்ள பிச்சைக்காரன் 2 படம்

விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் சசிக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

DIN

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சாதனை டைடஸ் நடித்து 2016-ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் - பிச்சைக்காரன்.

ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார் கதாநாயகனின் அம்மா. எந்த மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எல்லா வசதி வாய்ப்புகளையும் துறந்து, அடையாளத்தை வெளிப்படுத்தாமல் 48 நாள்கள் பிச்சைக்காரனாக நீ வாழ்ந்தால் உன் அம்மா பிழைப்பார் என ஒரு சாமியார் சொல்கிறார். அதை நம்பி தன் பணக்கார வாழ்க்கையைத் துறந்து பிச்சைக்காரனாக வாழ்கிறார் கதாநாயகன். வசதியான ஒருவருக்குப் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்கிற மையக் கதையுடன் பிச்சைக்காரர்களின் இயல்பான வாழ்க்கையையும் இணைத்து சுவாரசியமாகக் கதை செய்திருந்தார் சசி. பிச்சைக்காரனாக நடிக்கும் செல்வந்தர் என்கிற கதையே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக அமைந்தது.

இந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சாதனை செய்தது. தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படம் (பிச்சகாடு) 100 நாள்கள் ஓடி அசத்தியது. ரூ. 50 லட்சம் உரிமைக்கு விற்கப்பட்ட தெலுங்குப் பிச்சைக்காரன், ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. தமிழில் ஹிட், தெலுங்கில் சூப்பர் ஹிட் என்கிற பெயரை எடுத்தது. வெளியான அதே வருடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி, ரேட்டிங்கிலும் சாதனை படைத்தது பிச்சைக்காரன் படம்.

இந்தளவுக்கு விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் சசிக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தில் சசி இடம்பெறவில்லை. அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சில படங்கள் உள்ளதால் பிச்சைக்காரன் 2 படத்துக்கான கதையைத் தான் எழுதி வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனி கூறினார். 

இநிந்லையில் ஜூலை 24 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய் ஆண்டனி. அன்றைய தினம் பிச்சைக்காரன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.