தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து, நடிகா் விஷால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தோ்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகா் சங்கத் தோ்தலில் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூா்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தோ்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. எனவே, இந்தத் தோ்தலை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தனா்.
நடிகா் சங்கத்தை நிா்வகிக்க தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிா்த்து நடிகா் சங்கத்தின் தலைவா் நாசா், மற்றும் பொருளாளா் காா்த்தி சாா்பில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அனைத்து வழக்குகளையும் விசாரித்த உயா்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. புதிய நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலைத் தயாரித்து 3 மாதங்களுக்குள் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


