பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

‘திரெளபதி’ படத்துக்கு அஜித் ஆதரவளிக்கிறாரா?: இயக்குநர் விளக்கம்!

கதாநாயகன் அவர் உறவு என்பதால் மட்டுமே தல பெயரைப் பயன்படுத்துவது தவறான செயல்...

News image
Updated On :23 ஜனவரி 2020, 9:34 am

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி.

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிஷி ரிச்சர்ட் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளதால் திரெளபதி படத்துக்கு அஜித் ஆதரவளிக்கிறாரா என்று வார இதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் மோகன் ஜி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

எங்கள் படத்திற்கும் தல அவர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. நான் அவர் ரசிகன், கதாநாயகன் அவர் உறவு என்பதால் மட்டுமே தல பெயரைப் பயன்படுத்துவது தவறான செயல். இந்த படம் என் எழுத்து, என் உரிமை. இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. வாழுங்கள், வாழ விடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜனவரி 13 அன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்ததாவது:

வதந்திகளை நம்பாதீர். திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.