2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மோகன் ராஜா படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரசாந்த்! 22 கிலோ எடையைக் குறைத்தார்!

இப்படத்தை இயக்க நாங்கள் மோகன் ராஜாவை மட்டுமே அணுகினோம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள்..

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:34 pm

எழில்

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. 

இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ், சித்தார்த் போன்ற நடிகர்கள் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ‘நடிகர் பிரசாந்த் டிரினிடி காலேஜ் ஆஃப் லண்டனில் பியானோவின் நான்காவது கிரேடு தேர்வை வென்றுள்ளார். வீட்டிலும் அவர் பியானோவைத் தினமும் வாசிப்பார். எனவே பியானோ கலைஞர் வேடத்துக்கு பிரசாந்த் பொருத்தமாக இருப்பார்’ என தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்நிலையில் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தியாகராஜன் கூறியதாவது:

இப்படத்தை இயக்க நாங்கள் மோகன் ராஜாவை மட்டுமே அணுகினோம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. பிப்ரவரியிலிருந்து படப்பிடிப்புக்குச் செல்வோம். கடந்த  6 மாதங்களாக பியானோ பயிற்சிக்குச் செல்கிறார் பிரசாந்த். 22 கிலோ எடையைக் குறைத்துள்ள பிரசாந்த் மலேசியாவுக்குச் சென்று மேலும் பயிற்சியில் ஈடுபட்டு இன்னும் 5 கிலோவைக் குறைப்பார். விரைவில் படக்குழு பற்றி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.