அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக மைதான் என்கிற ஹிந்திப் படத்தில் நடிக்க இருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ப்ரியா மணி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒருநாள் மைதான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ். ஆனால், அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு மிகவும் இளையவராக இருப்பதாக படப்பிடிப்புக்குப் பிறகு இயக்குநரும் கீர்த்தி சுரேஷும் எண்ணினார்கள். படத்துக்கு ஒப்பந்தமான பிறகு அவர் மேலும் எடை குறைந்துவிட்டார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து 27 வயது கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக 35 வயது ப்ரியா மணி கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 1952 முதல் 1962 காலக்கட்டத்திலான இந்தியக் கால்பந்து குறித்த படம் மைதான். கால்பந்துப் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹிம் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மைதான் படம் நவம்பர் 27 அன்று வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண்குயின் என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ரஜினி நடிப்பில் சிவா இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


