மாஸ்டர்: முதலில் வெளியாகவுள்ள விஜய் பாடிய பாடல்!
பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடல் (குட்டிக்கதை) வெளியாகவுள்ளது...


பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடல் (குட்டிக்கதை) வெளியாகவுள்ளது. மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள அந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார் என்கிற அறிவிப்பு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...