பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் காதலர் தினத்திற்கான தங்கள் திட்டங்களை பகிர்ந்துள்ளனர்.
தொடர்ந்து வேலைகள் இருந்த போதிலும், இருவரும் காதலர் தினத்தின்று ஒன்றாக இரவு விருந்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
டேனியல் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் கூறுகையில்: "அன்றைய தினத்தில் ஒரு வேலையாக டாக்கா செல்கிறேன், வேலை முடிந்த பின்னர் வீட்டிற்குச் வந்துவிடுவேன். காலை டாக்காவில் கழித்தாலும், மாலை எனது அழகான மனைவியை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வேன். இந்தப் பயணத்தை முன்பதிவு செய்வதற்கு முன்பு, ஏற்கனவே அவரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டேன் " என்றார்.

தங்கள் குழந்தைகளான நிஷா, நோவா மற்றும் ஆஷர் ஆகியோருடன் தான் நேரத்தை செலவழிக்கப் போவதாகச் சன்னி கூறினார்.
"காலையில் குழந்தைகளுடன் நாளைச் செலவிடுவேன், பின்னர் உங்களுடன் (டேனியல்) இரவு உணவு சாப்பிடுவேன்," என்று அவர் கூறினார்.
காதலின் அர்த்தம் என்னவென்று சன்னியிடம் கேட்டதற்கு, அழகான பதிலைச் சொன்னார்.
"திருமண வாழ்க்கையில் காதலின் அர்த்தம் மிகவும் எளிமையானது, மகிழ்ச்சியான மனைவி, மகிழ்ச்சியான வாழ்க்கை." என்று சிரித்த சன்னி, ஜனவரி 2009 -ஆம் ஆண்டில் டேனியலை திருமணம் செய்து கொண்டார்,

டேனியல் கூறுகையில், "மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு சமரசம் முக்கியம்" என்றார்.
தற்போது சன்னி லியோன் "கோகா கோலா" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


