சென்னை இல்லத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறையினர் விசாரணை
சென்னை பனையூர் இல்லத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை பனையூர் இல்லத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள்.
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேசமயம், சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து நடிகர் விஜய்யை அவரது காரிலேயே வருமான வரித் துறையினர் சென்னைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பனையூர் இல்லத்தில் வைத்து விஜய்யிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை நாளை வரை நீடிக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...