விஜய் சேதுபதி தயாரிப்பில் கதாநாயகன் ஆகும் விஜய் மகன்!
அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் விரைவில் வெளிவரவுள்ள உப்பெனா (Uppena) என்கிற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். அப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் வில்லனாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து தயாரிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள மாஸ்டர் படத்திலும் வில்லனாக அவர் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது உப்பெனா படத்தின் கதை குறித்து விஜய்யிடம் விவாதித்துள்ளார் விஜய் சேதுபதி. அப்போதுதான் இந்தக் கதை தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என விஜய் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் சஞ்சய்.
தெலுங்கில் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா, தமிழிலும் விஜய் மகன் அறிமுகமாகும் படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...