டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கனடாவில் உள்ள மகனை எண்ணி நடிகர் விஜய் கவலை!

கனடாவில் உள்ள தனது மகனை எண்ணி நடிகர் விஜய் கவலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:26 pm

DIN

உலகம் முழுக்க கரோனாவின் அச்சுறுத்தலால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் சூழலில் கனடாவில் உள்ள தனது மகனை எண்ணி நடிகர் விஜய் கவலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் நடிகர் விஜய் மகன் சஞ்சய். இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சஞ்சயால் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தச் சமயத்தில் கனடாவில் மாட்டிக்கொண்டுள்ள மகனை எண்ணி நடிகர் விஜய் கவலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.