டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!

மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:05 am

எழில்

மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஈஷ்வர் கார்த்திக். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கடந்த வருட தீபாவளிக்கு விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் வெளியானது. அதன்பிறகு அவர் எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. 9 மாதங்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தமிழ்ப் படம் இது. அவருடைய 24-வது படம் என்பதால் இப்போதைக்கு கீர்த்திசுரேஷ்24 என அழைக்கப்படுகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.