விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நவம்பர் 7 அன்று தர்பார் பட தீம் இசை: அனிருத் தகவல்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

News image
Updated On :16 அக்டோபர் 2019, 5:53 am

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.

இந்நிலையில் நவம்பர் 7 அன்று தர்பார் படத்தின் தீம் இசையும் படத்தின் விடியோ போஸ்டரும் வெளியிடப்படும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால் தர்பார் படத்தின் இசை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.