விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

யூடியூபில் அதிகம் பேர் விரும்பிய டிரெய்லர்: பிகில் படம் சாதனை!

பிகில் பட டிரெய்லர் வெளியானபோது சில சாதனைகளை அது நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது...

News image
Updated On :16 அக்டோபர் 2019, 7:39 am

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பிகில் பட டிரெய்லர் வெளியானபோது சில சாதனைகளை அது நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது மிக முக்கிய சாதனை ஒன்றை பிகில் டிரெய்லர் படைத்துள்ளது. இந்தியாவில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமை பிகில் டிரெய்லருக்குக் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் யூடியூபில் 2 மில்லியன் லைக்குகளை வாங்கியது. பிகில் படம் அதைத் தாண்டி அதிக லைக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது (பார்வைகள் எண்ணிக்கையில் ஜீரோ படம் 12 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரம் பெற்றுள்ளது. பிகில் படம் 2 கோடியே 98 லட்சத்து 14 ஆயிரம் பெற்றுள்ளது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.