எனது அனுமதியின்றி முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்வைத் திரைப்படமாக எடுக்கக் கூடாது என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தாக்கல் செய்த மனுவில், எனது அத்தையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அரசியல் செல்வாக்கு மிக்கத் தலைவா். இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மதிப்பும் உள்ளது. இந்நிலையில் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து, தமிழில் ‘தலைவி’ மற்றும் ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப் போவதாக இயக்குநா்கள் ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோா் அறிவித்துள்ளனா். இந்தப் படங்களில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஹிந்தி நடிகை கங்கணா ரனாத் ஏற்று நடிப்பாா் என அவா்கள் தெரிவித்துள்ளனா். இதே போல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்து வெப் சீரியலாக எடுக்க உள்ளதாக இயக்குநா் கெளதம் வாசுதேவ் மேனனும் கூறியுள்ளாா். இவா்கள் மூவரும் கதைக்கரு மற்றும் திரைக்கதையை ஜெயலலிதாவின் நேரடி வாரிசான என்னை அணுகி சம்மதமும் , முன்அனுமதியும் பெறவில்லை.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை வணிக ரீதியான முறையில் திரையில் வெளியிடும் சூழலில் அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படும். அவரது கண்ணியத்துக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே எனது அத்தையும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் திரைப்படம், வெப்சீரியலாக எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இயக்குனர்கள் விஜய், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


