டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

லாரி ஓட்டுனர்களுக்கு என் சல்யூட்! நடிகர் கார்த்தி பேட்டி

‘கைதி’ படத்துக்கு விமா்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

News image
kaithi movie still
Updated On :31 ஜனவரி 2024, 10:38 am

ஜி. அசோக்

‘கைதி’ படத்துக்கு விமா்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் மேக்கிங் குறித்து சினிமா ஆா்வலா்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள். இது குறித்து கார்த்தி பேசும் போது... ‘இது எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவம். எப்போதுமே எங்கள் செட் அமைதியாக இருக்கும். அதுதான் எனக்குப் பலம். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீா்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணா்ந்தேன்.

Story image

இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவா்களை விட எல்லா வகையிலும் ஓட்டுநருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்குக் கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுநா்களின் பெருமை இப்போதுதான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவா்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன். ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆா்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவா்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவா்கள்தான். அது எப்பவும் நம்மைப் பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும்’’ என்றார் கார்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.