/

உள்ளம் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துமாம்! மேக்கப் இன்றி புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்

பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் மேக்கப் மற்றும் ஃபில்டர் எஃபக்டகள் இன்றி தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:03 am

Raghavendran

பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் மேக்கப் மற்றும் ஃபில்டர் எஃபக்டகள் இன்றி தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய திரைத்துறையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் காஜல் அகர்வால். 

இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என கோலிவுட் முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். 

Story image

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் மேக்கப் மற்றும் ஃபில்டர் எஃபக்டகள் இன்றி தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

சமூக ஊடகங்கள் வந்த பிறகு நாம் நம்முடைய உண்மைத்தன்மையையும், சுயமரியாதையையும், தனித்துவ அடையாளத்தையும் இழந்துவிட்டோம். அழகு சாதனப் பொருட்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறோம். இதனால் நாம் தனித்துவிடப்படுகிறோம்.

Story image

நாம் நம்மை அப்படியே ஏற்கும்போது தான் நமது அழகு கூடுகிறது, வசீகரம் அதிகரிக்கிறது. மேக்கப்களால் உடல் அழகு மேம்பட்டாலும், ஒருவரின் உள்ளம் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.