தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய் சேதுபதி !

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் கனவாக இருக்கும்.

News image
Updated On :19 பிப்ரவரி 2019, 6:04 am

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் கனவாக இருக்கும். இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திய அவர், பெரும் நட்சத்திரப் பட்டாளத்துக்கிடையே தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து பரவலான பாராட்டைப் பெற்றார். எல்லா தரப்பு ரசிகர்களிடையே படம் வரவேற்பை பெற்றது.

இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப் படமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான திரைக்கதையை அண்மையில் எழுதி முடித்தார். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்க நினைத்த மணிரத்னம், முதலில் விஜய், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, மகேஷ் பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, நான்கு மொழிகளில் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது பட்ஜெட் பிரச்னைகளால் அது கைவிடப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், படம் பற்றிய மேலதிகத் தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.