15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இன்று மாலை 6 மணிக்கு சர்கார் கொண்டாட்டம்! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "சர்கார்'. படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 7:29 am

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'சர்கார்'. படத்தின் 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் கூட்டணி 4-ஆவது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.  இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளனர்.  அனைத்து ரசிகர்களையும் அரங்கத்திற்குள் பங்கேற்க வைக்க முடியாது என்பதால், அரங்கம் கொள்ளும் அளவிற்கு எண்ணிக்கையில் உள்ள ரசிகர்களை மட்டும் தேர்வு செய்யவிருக்கிறது படக்குழு.

இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் அதிரடியாக ஒரு விளம்பர அறிவிப்பை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 24-ம் தேதி சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த முதல் சிங்கள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. விளம்பரம் வந்தது முதல் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.