நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சர்வதேச விருது: நடிகர் விஜய்-க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:53 pm

Raghavendran

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார். சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

முதன் முறையாக 3 கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2018-ம் ஆண்டுக்கான சர்வதேச சாதனைக்கான அங்கீகார விருதுகள் (ஐஏஆர்ஏ) விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதை மெர்சல் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்றார்.

Story image

இந்நிலையில், ஐஏஆர்ஏ விருது பெற்றதற்காக நடிகர் விஜய்-க்கு, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். திரைத்துறையில் விஜய்-யின் ஆரம்ப காலகட்டத்தில் செந்துரப்பாண்டி திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் அவருடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.