கனடாவைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், கிடாரிஸ்ட், புகைப்பட நிபுணர், கொடையாளர் மற்றும் தன்னார்வலருமான ப்ரயன் ஆடம்ஸைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது ராக் ஆல்பங்கள் உலகம் முழுக்க இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. 1983 ல் தான் வெளியிட்ட cuts Like A knife ஆல்பம் மூலமாக கனடா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த ப்ரயன் ஆடமின் புகழ் சர்வ தேச அளவில் பரவி அவரை குளோபல் ஸ்டார் ஆக்கியது. 1984 ல் வெளி வந்த அவரது Reckless ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த Run To You, summer of 69 உள்ளிட்ட பாடல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக 1991 ல் ப்ரயன் வெளியிட்ட Waking up the Neighours ஆல்பத்தின் (Everything I Do ) Do It For You பாடல் ஒரெ இரவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உலக அளவில் பல்வேறு நாடுகளின் இசை ஆல்ப விற்பனையில் முதலிடம் பிடித்தது. அவரது இசைச்சேவைக்காக இதுவரை ப்ரயன் ஆடம், 15 கிராமி அவார்டுகள் முதல் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.