இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த அத்தாரிண்டிகி தாரேதி என்ற படம் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியானது. இப்படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தமிழில் இயக்கவிருக்கிறார். நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் இதுதான். லைக்கா நிறுவனத்தின் டிவிட்டரில் இப்படம் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

'அத்தாரிண்டிகி தாரேதி’ படத்தில் சமந்தா மற்றும் ப்ரணிதா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்னர். தமிழ் ரீமேக்கில் மேகா ஆகாஷ் மற்றும் கேத்ரின் தெரசா நடிக்கின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் மஹத் தற்போது இணைந்துள்ளார். இத்தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள மஹத், இது குறித்த அதிகாரபூர்வமான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


