15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாள மயம் டோக்கியோ திரைவிழாவில் பங்கேற்றது!

`மின்சார கனவு', `கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'

News image
Updated On :9 அக்டோபர் 2018, 10:23 am

`மின்சார கனவு', `கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிருதங்க வித்வான் ஒருவரிடமிருந்து அவரது கலையை கற்றுக் கொள்ள விரும்புகின்ற ஒரு இளைஞனின் கதை இது. பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவனது நோக்கம் நிறைவேறியதா என்பதே படத்தின் ஒற்றை வரிக் கதை.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ஷூட்டிங் முடிவடைந்து, படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், சர்வம் தாள மயம் படமானது 31-வது டோக்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது.

இச்செய்தியை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.