தேசிய விருது பெற்ற 'ஆரண்ய காண்டம்’புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமாரராஜா இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதில் அவர் திருநங்கை வேடத்தில் ஷில்பா எனும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிந்த பின்னர் திரையிடலை உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்கவிருக்கின்றனர். இதற்காக படத்தின் ரிலீஸ் தேதியை சில காலம் தள்ளி வைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், இதோ எனக்கு ரொம்ப புடிச்ச டைரக்டரோட (தியாகராஜா குமாரராஜாவோட) சூப்பர் டீலக்ஸ் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


