நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வைரலான பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:59 pm

Raghavendran

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு பேட்ட என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார். 

இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2-ஆவது லுக் தோற்றத்தில் இருப்பது போன்ற ரஜினிகாந்த் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.