தமன்னா நடித்த ஸ்கெட்ச் படம் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பை கொடைக்கானலில் முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் வங்கி பணியாளராக நடித்துள்ளார் தமன்னா. தனது இன்ஸ்டாகிராமில் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவர் ‘காலம் மிக விரைவாக ஓடுகிறது. ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. சீனுவின் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சிக்குரியது. உதயநிதி ஒரு சென்சிட்டிவ் ஆக்டர். இந்தப் படத்தில் அவர் வித்யாசமாக நடித்துள்ளார். நிச்சயம் அனைவருக்கும் அவரது கதாபாத்திரம் பிடிக்கும். இந்தப் படம் இப்போதுதான் ஷூட் பண்ண ஆரம்பித்தது போலுள்ளது, ஆனால் அதற்குள் முடியப் போகிறது’ என்று வியப்புடன் பதிவிட்டிருந்தார் தமன்னா.
சமூக அக்கறை சார்ந்த இந்தப் படம் ஒரு காதல் கதையும் கூட. ஜனவரியில் தொடங்கிய படப்பிடிப்பு விரைவாக நடந்து முடிந்துள்ளது. சீனு ராமசாமியுடன் இதற்கு முன் தர்மதுரை படத்தில் இணைந்திருந்தார் தமன்னா. கண்ணே கலைமானே இவர்களது இரண்டாவது படம். படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றபின் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


