பயோபிக் என்று சொல்லப்படக் கூடிய வாழ்க்கைச் சித்திரத் திரைப்படங்களின் காலம் இது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான மனிதர்களாக புகழின் உச்சியில் வாழ்ந்து மறைந்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் பாரதி, பெரியார், காமராஜர் உள்ளிட்டோர் குறித்து வாழ்க்கைச்சித்திர திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்தியிலும் டங்கல், மாஞ்சி, மேரிகோம், மில்கா சிங் உள்ளிட்ட திரைப்படங்களை அந்த வரிசையில் சேர்க்கலாம். தெலுங்கில் தற்போது வெளிவரத் தயாராகவிருக்கும் ‘மகாநதி’ திரைப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.