நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உருவானது முதல் சிக்கல்: பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு!

பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:01 pm

எழில்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, தனது முதல் பிரச்னையைச் சந்தித்துள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) உறுப்பினர்கள் மிகக்குறைவாக வேலை பார்ப்பதால், பிக் பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று ஃபெப்சி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. கடந்த வருடமும் இதேபோல சிக்கல் ஏற்பட்டபோது, கமலிடம் ஃபெப்சி அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி 50% பெப்சி ஊழியர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிந்தார்கள். ஆனால் அதே பிரச்னை இந்தமுறையும் தொடர்வதால் மீண்டும் போராட முடிவெடுத்துள்ளது ஃபெப்சி அமைப்பு.

ஃபெப்சி அமைப்பின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் ஒரு பேட்டியில் கூறியதாவது: வெள்ளிக்கிழமைக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டதால் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. ஆனால் இதற்குப் பிறகும் அவர்களுடைய படப்பிடிப்பில் எங்களுடைய ஊழியர்கள் கணிசமாகப் பணிபுரியவில்லை என்றால், வரும் சனிக்கிழமை முதல் பிக் பாஸ் 2 படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஃபெப்சி அமைப்புடன் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.