தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருமணத்துக்கு பின் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ள நடிகை இவர்தான்!

முன்பு இந்திய திரையுலகில் திருமணத்துக்குப் பின் நடிக்க வரும் நடிகைகளுக்கெனவே தனி ரோல்கள் காத்திருக்கும்.

News image
Updated On :18 ஜூன் 2018, 6:22 am

முன்பு இந்திய திரையுலகில் திருமணத்துக்குப் பின் நடிக்க வரும் நடிகைகளுக்கெனவே தனி ரோல்கள் காத்திருக்கும். அக்கா, அண்ணி, அம்மா, வில்லி என்று அந்தப் பட்டியல் நீளும். சில நடிகைகள் பாட்டியாகக் கூட நடித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, திருமணத்துக்குப் பின்பும் தங்களுடைய திரை வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்கின்றனர் கதாநாயகிகள்.

Story image

பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், கஜோல், கரீனா கபூர், வித்யா பாலன், ராணி முகர்ஜி, ராதிகா ஆப்தே, அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் வெற்றிகரமாக தொடகிறார்கள்.

Story image

தென்னிந்திய நடிகைகளைப் பொருத்தவரை அமலா பால், சமந்தா இருவரும் திருமணத்துக்கு பின்னரும் அதே ஸ்டார் வேல்யூவுடன் நடித்து வருகிறார்கள். கணவருடனான கருத்து வேறுபாட்டால் அமலா பால் விவாகரத்துப் பெற்று தொடர்ந்து தமிழ் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

Story image

சமந்தாவைப் பொருத்த வரை தெலுங்குத் திரை உலகம் அவரை கொண்டாடி வருகிறது. தமிழிலும் அண்மையில் வெளிவந்த இரும்புத் திரை நல்ல பெயர் எடுத்துத் தந்துள்ளது. சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

Story image

இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Story image

பெங்களூரு டேஸ் பட ஷூட்டிங் போதுதான் நஸ்ரியா ஃபகத் பாசில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் ஃபகத் பாசிலிடம் நஸ்ரியா தொடர்ந்து நடிப்பாரா என்று கேட்டுள்ளார். அதற்கு ஃபகத் அது நஸ்ரியாவின் விருப்பம் என்று கூறியிருந்தார். நஸ்ரியா நல்ல நடிகை அவர் திரைப்படங்கள் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன்...ஏன் நீங்களே உங்கள் அடுத்த படத்திலேயே நடிக்க வையுங்களேன்’ என்றும் ஃபகத் பகடி செய்துள்ளார்.

Story image

அப்போது விளையாட்டாக ஃபகத் கூறியதை  மூன்று ஆண்டுகள் கழித்து அஞ்சலி மேனன் நிறைவேற்றியுள்ளார். அவர் தற்போது இயக்கும் மலையாளப் படத்தில் நஸ்ரியாவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். 'கூடே’ என்ற இந்தப் படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பார்வதி இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். ஹாப்பி ஹர்னி என்ற மராத்தியப் படத்தின் ரீமேக்தான் இப்படம். தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

Story image

மலையாளப் படங்களைத் தொடர்ந்து தமிழிலும் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். தனக்கு பொருத்தமான வேடங்களில் நடிப்பதை விரும்புவதாகக் கூறியிருக்கிறார் நஸ்ரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.