‘பேய் எல்லாம் பாவம்’ என்ற தன் முதல் படத்தை இயக்கி வருகிறார் தீபக் நாராயணன். விளம்பரப் படங்களை இயக்கி வரும் இவர் அதற்கு முன்னர் மலையாளப் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழில் காமெடி த்ரில்லர் ஜானரில் ஒரு படம் எடுக்க முடிவு செய்து பேய் எல்லாம் பாவம் என்ற படத்தை விறுவிறுப்புடன் இயக்கி வருகிறார்.
புதுமுகங்கள் நடித்து வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக டோனா சங்கரை அறிமுகப்படுத்தியுள்ளார் தீபக். இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் வெளிவரும் முன்னரே இருவரும் திடீரென திருமணம் செய்துள்ளனர். தன் படத்தில் நடிக்கும் ஹீரோயினை இயக்குனர் காதலிப்பதும் திருமணம் புரிந்து கொள்வதும் கோலிவுட்டில் புதிய விஷயம் இல்லையென்றாலும் இவர்களது திருமணம் பரபரப்பு செய்தியானது.
தீபக் நாராயணன் இது குறித்து கூறுகையில், ‘டோனாவும் நானும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதில் தொடங்கி, இருவருக்கும் ஒத்த ரசனைகள் விருப்பங்கள் இருந்ததை பழகும் போது தெரிந்து கொண்டோம். நட்பு காதலாக மலர்ந்து, இப்போது பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்துள்ளது. என் மனைவி டோனா தொலைக்காட்சி தொடர் மற்றும் அவருக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பார்’ என்று கூறினார்.
படத்தைப் பற்றிக் தீபக் கூறியது, ‘பொதுவா பேய் படம் என்றால் சில விஷயங்கள் இருக்கும். ஆனால் நாங்கள் அதையெல்லாம் தவிர்த்து, வித்யாசமாக எடுத்துள்ளோம். காமெடிக்கு பஞ்சம் இருக்காது’ என்றார்.
படக்குழுவினர் மற்றும் நெருங்கிய வட்டத்தினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் பட வெளியீட்டுச் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாகக் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


