வடசென்னை படத்திற்கு ஏற்கனவே டபுள் எதிர்ப்பார்ப்பு. காரணம் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிக்கிறார் என்பதும், வட சென்னையைப் பற்றி எடுக்கப்பட்ட படங்கள் பல இருந்தாலும் வெற்றிமாறனின் இந்த வட சென்னை எதைப் பற்றி பேசவிருக்கிறது என்றும் ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வட சென்னை படத்தில் தனுஷ் அன்பு எனும் கதாபாத்திரத்தில் கேரம் போர்ட் விளையாட்டு வீரராக நடித்துள்ளார். அடர் தாடி மீசையுடன் வித்யாசமான கெட்டப்பில் படத்தில் தோன்றுவார். வட சென்னையில் வாழும் அன்புவின் 35 வருட கால வாழ்க்கை படமாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவு புகழ்ப்பெற்ற ஒரு கேரம்போர்ட் ப்ளேயர், உலகச் சாம்பியனாக உழைத்துக் கொண்டிருக்கையில் எப்படி கேங்க்ஸ்டர் ஆனால் என்பதே இப்படத்தின் ஒற்றை வரிக் கதை. சமூக அரசியல் பின்னணியில் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் போல வடசென்னையும் இருவர் கூட்டணியில் பேசப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

வொண்டர்பார் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரகனி, கிஷோர், டானியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெற்றி மாறனுடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வடசென்னை ட்ரெய்லரின் முதல் பகுதி ஜூலை 28 வெளியாகும் என்றும் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


