பலவிதமான சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்ட சிம்பு, அண்மையில் சமூக நலனுடன் பொறுப்பாக பேசியதில் மக்களிடையே பாராட்டு பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது திரையுலக வாழ்க்கையில் சில ஏற்றங்கள் நிகழவிருக்கிறது. தற்போது வெளிநாட்டில் உள்ள சிம்பு, விரைவில் தாயகம் திரும்புகிறார்.
செக்கச் சிவந்த வானம் படத்தில் அவருடைய காட்சிகள் படமாக்கம் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதியில் அப்படத்திற்கு டப்பிங் பேசவிருக்கிறார். ஓவியா நடிப்பில் உருவாகிவரும் 90 மில்லி எனும் படத்தின் இசையமைப்பாளர் சிம்புதான். அதையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படி அடுக்கடுக்கான வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர், ஒரு மாதம் ஓய்வு எடுக்கவுள்ளாராம் சிம்பு. அதன் பின்னர், முழு சுழற்சியில் தனது வேலைகளைத் தொடங்கவிருக்கிறார் என்கிறது அவரது வட்டாரம்.
அண்மையில் இரண்டு புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று காலம் சென்ற நாகி ரெட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் நடிக்க சிம்பு ஆர்வமாக உள்ளார். காரணம் அப்பட நிறுவனம் இதற்கு முன்னால் தயாரித்த படங்களான அஜித்தின் வீரம், விஜயின் பைரவா ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. சிம்புவின் இந்தப் புதிய படத்தின் பெயர், பிற நடிகர்கள் என எதுவும் உறுதியாக நிலையில் சிம்பு நடிப்பது மட்டும் உறுதியாகியிருப்பது அவரது மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணம்.
இதனை அடுத்து சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரமும் எடுக்கவுள்ளார். நீண்ட நாட்களாக அவரது கனவுப் படமாக இருக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் சிம்பு. 'விண்ணைத் தாண்டி வருவேன்' என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் அப்படம், கெளதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றார் சிம்பு. இப்படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
மேற்சொன்ன படங்களைத் தவிர சிம்பு கலைப்புலி தாணு தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். அடுத்த சில மாதங்கள் சிம்புவின் கடிகார முட்கள் தறிகெட்டு ஓடவிருக்கிறது, அந்தளவுக்கு ஆக்டர் பிஸி என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


