தெறி, மெர்சல், .... ?: அதிகாரபூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள்!
அஜித் - சிவா கூட்டணி போல விஜய் - அட்லி கூட்டணியும் பிரிக்கமுடியாததாக உள்ளது...


அஜித் - சிவா கூட்டணி போல விஜய் - அட்லி கூட்டணியும் பிரிக்கமுடியாததாக உள்ளது.
தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் அட்லியின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார் விஜய். அதிலும் மெர்சல் படம் வசூலில் பல சாதனைகள் புரிந்துள்ளதால் விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் சாத்தியமாகவுள்ளது. மெர்சல் படம் போல இந்தப் படமும் அரசியல் பின்னணியைக் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மூன்றாவது முறையாக விஜய் - அட்லி இணையும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...