அது மட்டுமல்ல, சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘சர்கார்’ திரைப்பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றதால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் அங்கிள், திரைப்படங்கள் இளைஞர்களிடையே மோசமான பழக்க வழக்கங்களைத் திணிக்கின்றன என்றும்...அப்படியான திரைப்படம் எடுப்பவர்கள் மற்றும் அதில் நடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால்... தயவு செய்து நாட்டில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் திரைப்படங்களைக் காரணமாக்கி விடாதீர்கள். திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்து ரசியுங்கள். என்னால் இதுகுறித்து நேரடியாகத் தங்களுடன் விவாதிக்க முடியும். உங்களது அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும் முடியும். எனவே பொதுமக்கள் மத்தியில் இது குறித்து நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள நான் ரெடி ஆங்கிள். நீங்களும் ரெடியா?’ என்று எதிர்கேள்வி தொடுத்திருக்கிறார் சிம்பு.