இந்தப் பரபரப்பை மையமாக வைத்து தெலுங்கில் பிரபல நகைச்சுவை நடிகர் கம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கும் பிதிரி சதி என்பவர் கமலின் சலங்கை ஒலி பரதநாட்டியப் பாடலை ஸ்பூஃப் செய்திருக்கிறார். அதில் அவர் கமலுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். அது என்னவென்றால், கமல் சார், கேரளாவைச் சேர்ந்த உன்னிக்கு மட்டும் தான் உங்கள் பாராட்டா? இதோ, ஆந்திராவைச் சேர்ந்த நான், உங்களது ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) திரைப்படத்தின் பரதநாட்டியப் பாடலை உங்களைப்போல ஆட முயற்சித்திருக்கிறேன். ஆடுவதோடு நான் பாடவும் செய்கிறேன். என் மீதும் உங்கள் பார்வை பட்டால் என்ன? உங்களோடு சேர்ந்து உங்கள் படத்தில் என்னையும் நாட்டியம் ஆட வைத்தால் அப்படியே பூ மழை தூவாதா என் மீது?! என்று கற்பனையில் ஆழ்ந்து போகிறார்.