சன்னிக்கு இப்படிப்பட்ட அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லை. இன்றைய தேதிக்கு இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் வரலாறு காணாத டிராஃபிக் ஜாம் ஏற்படுத்தக் கூடிய நபர்களில் சன்னியும் ஒருவர். உதாரணம் அவர் கடந்தாண்டில் கொச்சிக்கு வருகை தந்த வீடியோவை யூடியூபில் தேடிப் பாருங்கள். சேட்டன்கள் இந்த கனடா பிரஜையான சேச்சியைக் காண எப்படித் தவித்திருக்கிறார்கள் என்று புரியும். அந்தக்கதையை விடுங்கள். ஆனால், அப்படிப்பட்ட இடத்தை அடைய இந்தப் பெண் எதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறார் என்று அவரது ஆதர்ஸ ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே! அதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘தி அன் டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ வெப் சீரிஸ். படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.