இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வெற்றிப் பெற்ற படம் ‘குயின்’. இப்படத்திற்காக கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்றார்.
இதே படம் தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் ஆகியோர் நடிக்க நான்கு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

இப்படத்தின் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் நீலகண்டா இயக்குகிறார். ஒவ்வொரு மொழியிலும் படப்பிடிப்பு உற்சாகமாக நடந்து வரும் நிலையில், தெலுங்குப் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலாக இயக்குநர் நீலகண்டாவுக்கும், நடிகை தமன்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்தி குயின் படத்திலிருந்து மாறுபட்டு சில காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களுக்காக மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர் நீலகண்டா. ஆனால் இது தமன்னாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. சில சமயம் எரிச்சலடைந்த தமன்னா படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளார். தற்போது அவரிகளுக்கிடையே சமரச முயற்சி நடந்து வருகிறது.

குயின் படத்தின் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதும் பிரான்ஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

காஜல், தமன்னா, மஞ்சிமா, பருல் ஆகிய நால்வரிடையே படப்பிடிப்பின் போது நல்லதொரு நட்பு உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


