மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

'காலா' டீஸர் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ்!

காலா டீஸர் ரிலீஸ் தேதியை பஞ்ச் வசனத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் சனிக்கிழமை வெளியிட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:19 pm

Raghavendran

'கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கரிகாலன்' என்கிற 'காலா'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் பிப்ரவரி 10-ந் தேதி ட்வீட் செய்தார். இச்செய்தி ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், காலா டீஸர் தொடர்பான புதிய அறிவிப்பை தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், "இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!" என்கிற பஞ்ச் வசனத்துடன் மார்ச் 1-ந் தேதி காலா டீஸர் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தின் வெளியீடு கிராபிக்ஸ் பணிகள் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்க பிப்ரவரி 23-ந் தேதி ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.