எங்கேயோ பார்த்த நினைவு... யாரிந்த மூவர் கூட்டணி? கரெக்ட்டா கண்டுபிடிங்க பார்க்கலாம்!
இரண்டாவதாக இருப்பவர் சமீபத்தில் வசூலில் வரலாறு படைத்த தென்னிந்திய எபிக் திரைப்படத்தின் வில்லன் அல்லது ஆண்ட்டி ஹீரோ.


புகைப்படத்தைப் பார்த்தீங்களா?
மூன்று முகங்களையுமே எங்கேயோ பார்த்த ஞாபகம் வருதா? நிச்சயமா பார்க்காம இருக்க முடியாது. இவங்க அக்கட பூமியின் அசத்தல் ஹீரோக்களாக இருந்தாலும் கோலிவுட்டில் ஹிட் கொடுக்கும் ஆசையும் இவங்களுக்கு உண்டு. ஒருத்தர் கொடுத்துட்டார். மற்ற மூன்று பேரும் எப்போ கொடுப்பாங்களோ தெரியாது. இந்தப் புகைப்படம் அவர்களின் பள்ளி அல்லது கல்லூரிப் பருவத்தில் எடுக்கப் பட்டிருக்கலாம். இப்போதைய இவர்களின் தோற்றத்தோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் சாயல் இருக்கிறதே தவிர இவர்களின் திரைப்படங்களை இதுவரை காணாதவர்கள் இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்.
சரியாக அடையாளம் கண்டு விட்டோம் என்று நினைப்பவர்கள் அவர்களது பெயர்களை புகைப்படத்திலிருப்பது போல வரிசைப்படுத்திச் சொல்ல முயற்சி செய்யுங்க பார்க்கலாம்.
அடையாளம் காண முடியாதவர்களுக்கு இங்கே சில க்ளூஸ்...
முதலில் இருப்பவர் மெகா மகாதீரர்.
இரண்டாவதாக இருப்பவர் சமீபத்தில் வசூலில் வரலாறு படைத்த தென்னிந்திய எபிக் திரைப்படத்தின் வில்லன் அல்லது ஆண்ட்டி ஹீரோ.
மூன்றாவது நபரின் தாயாரும் தமிழில் ஒருகாலத்தில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தவர்.
இந்த க்ளூ போதுமா? இப்போ கண்டுபிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம்.
சும்மா ஒரு சினிமா க்விஸ்... அவ்வளவு தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...