மறக்க முடியுமா கலைஞரை?! என்ற தலைப்பில் கலைஞர் நினைவேந்தல் விழாவொன்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சத்யராஜ், ராதிகா, நாசர், சிவக்குமார், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், பிரபு, பார்த்திபன் உள்ளிட்டோருடன் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் கூட கலைஞர் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். தெலுங்கில் நடிகர் சங்க மேடைகள் என்றில்லை, அரசியல் மேடைகளிலும் கூட மோகன்பாபு எப்போதுமே தனது அதிரடியான மேடைப்பேச்சுகளுக்காக பெயர் போனவர். அப்படிப் பட்டவரை கலைஞர் குறித்துப் பேசவும் அழைத்திருந்தது சற்று வியப்பாகத் தான் இருந்தது. ஏனெனில், மோகன் பாபுவுக்கும் கலைஞருக்கும் அப்படிப் பெரிதாக எந்த ஸ்னேகமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகெதற்கு மோகன்பாபு என்றால், ஒருவேளை அவரது இந்தப் பேச்சுக்காகக் கூட இருக்கலாம்.