தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா, பிரணிதா, நதியா, பொமன் இரானி உள்ளிட்டோர் நடிப்பில் இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. கதை மிக எளிமையானது என்றாலும் அதன் திரைக்கதையாக்கத்தில் பின்பற்றப்பட்ட உத்தி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. கோடீஸ்வர தாத்தா பொமன் இரானிக்கு பக்கவாதம்... அவரது நெஞ்சில் நீங்காத வடுவாக மிஞ்சியிருக்கிறது மகள் நதியா தந்தையுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு சென்ற சோகம். தந்தைக்குப் பிடிக்காத திருமணத்தால் குடும்பத்தை வெறுத்து ஒதுக்கி விட்டுச் சென்ற அத்தை நதியாவை மீண்டும் தாத்தாவுடனும் தனது குடும்பத்தினருடனும் இணைத்து வைப்பதாக சபதம் செய்கிறார் பேரன் பவன் கல்யாண். கோபித்துக் கொண்டு உறவை வெட்டி விட்டுச் சென்ற அத்தையை என்ன சொல்லி மீண்டும் குடும்பத்துடன் இணைத்து வைக்கிறார். தன் தாத்தாவுடன் இணைத்து வைக்கிறார் என்பது தான் அந்தரின்டிகி தாரேதி திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இந்த துக்கடா கதையை வைத்துக் கொண்டு இயக்குனர் திரிவிக்ரம் படத்தில் பஞ்ச் வசனங்களாலும், திரைக்கதையாக்கத்தாலும் சடுகுடு ஆடியிருப்பார்.