கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

'காலா' திரைப்பட பாடல் வெளியீடு தேதி: தனுஷ் ட்விட்டரில் அறிவிப்பு

'காலா' திரைப்பட பாடல் வெளியீடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:52 pm

Raghavendran

'கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கரிகாலன்' என்கிற 'காலா'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முன்னதாக 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீடு தடைப்பட்டது.

பின்னர் தமிழக அரசின் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் காரணமாக போராட்டம் முடிவுற்றது. 'காலா' திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், 'காலா' திரைப்பட பாடல்கள் மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.