கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை

தம்மம்பட்டி பேரூராட்சி சாலையை விரைந்து அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாக கிடக்கும் தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலை.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி பேரூராட்சி சாலையை விரைந்து அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு வழியாக செந்தாரப்பட்டி செல்லும் வாகனங்கள் சென்றுவருகின்றன. மழைக்காலத்தின்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், பேரூராட்சி நிதி மூலம் கான்கிரீட் சாலை அமைக்க தீா்மானிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சாலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண் கொட்டி நிரவப்பட்ட நிலையில், அண்மையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வயதானவா்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே, தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டி செல்லும் குரும்பா் தெரு சாலையில் தாா்சாலை அல்லது கான்கிரீட் சாலையை உடனடியாக அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.