/

கமல் - விஜய் ரசிகர்கள் இடையே சலசலப்பை உண்டாக்கிய நடிகையின் 'மெர்சல்' ட்வீட்! 

தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜயின் 'மெர்சல்' படம் தொடர்பாக நடிகை கஸ்தூரி டிவிட்டரில் தெரிவித்த ஒரு கருத்தின் மூலமாக, கமல் - விஜய் ரசிகர்கள் இடையே சிறிய சலசலப்பு உண்டானது.    

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:55 pm

DIN

சென்னை: தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜயின் 'மெர்சல்' படம் தொடர்பாக நடிகை கஸ்தூரி டிவிட்டரில் தெரிவித்த ஒரு கருத்தின் மூலமாக, கமல் - விஜய் ரசிகர்கள் இடையே சிறிய சலசலப்பு உண்டானது.    

நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் இயக்குனர் அட்லீ இந்தப் படத்தில் ஏற்கனவே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பிரபல படங்கள் சிலவற்றின் காட்சிகளை பயன்படுத்தியுள்ளார் என்ற விமர்சனங்களும் வலைதளங்களில் உலா வருகின்றன.

இந்நிலையில் படம் வெளியான அன்று நடிகை கஸ்தூரி பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் ஒரு கருத்தினை பதிவு செய்தார். அதில் அவர் 'கமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி' என்று தெரிவித்திருந்தார்.

Story image

இதன் காரணமாக அவர் கமலை நடிகர் விஜயுடன் ஒப்பிட்டு அவமமானப்படுத்தி விட்டதாக அவரது ரசிகர்கள் கஸ்தூரியின் பக்கத்தில் விமர்சித்திருந்தனர். ஆனால் கஸ்தூரி அதற்கு இரண்டுக்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது, கண்டுபிடியுங்கள்; என்று பதில் அளித்திருந்தார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் மற்றொரு ட்வீட்டினை பதிவு செய்தார். அதில் அவர் 'Actually, தாய் எட்டடி இல்லை... மூணே அடித்தான். Got it?' என்று கேட்டிருந்தார்.

Story image

அதன் மூலமே அவர் கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படம் போன்றே, விஜயின் 'மெர்சல்' படத்திலும் தந்தையை கொன்றவர்களை மகன் பழிவாங்கும் கதை என்பதையே கஸ்தூரியை குறிப்பிடுவதை ரசிகர்கள் உணர்ந்து கொண்டனர்

இதன்காரணமாக டிவிட்டரில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.