பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்?: சத்யராஜின் நக்கல் பதில்!

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா?

News image
Updated On :8 மார்ச் 2017, 9:59 am

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா? 

சத்யராஜிடம் கேட்டால் தெரியுமா? பாகுபலி 2 படம் வெளிவரும் முன்பு அந்த ரகசியத்தை அவர் மட்டும் உடைத்துவிடுவாரா என்ன?

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்கிற கேள்வியை சமீபத்தில் எதிர்கொண்டார் சத்யராஜ். அதற்கு அவர் நக்கலாக சொன்ன பதில் - ஏனென்றால் என் இயக்குநர் கொல்லச் சொன்னதால் கொன்னேன் என்றார்! 

மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக இந்தக் கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். என் குடும்பத்தினரிடம் கூட இதுபற்றி இன்னும் சொல்லவில்லை. இந்தத் துறையில் 40 வருடங்களாக உள்ளேன். ஒரு படத்தின் கிளைமாக்ஸையோ முக்கிய காட்சியின் ரகசியத்தையோ வெளியே சொல்வது சரி கிடையாது. பாகுபலி கதாபாத்திரங்கள் புகழ்பெறும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்தியா முழுக்கப் பரபரப்பாகப் பேசப்படும் என்று ஒருபோதும் எண்ணவில்லை. மீம்கள் கூட உருவாக்குகிறார்கள். இந்தப் பேரும் புகழும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன என்றார். 

கடந்த வருடம் இயக்குநர் ராஜமெளலியிடம், பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்று கேட்டபோதும் இதேபோல ஒரு பதில்தான் சொன்னார்: பாகுபலியை கட்டப்பா கொன்றதன் காரணம் - நான் அவனைக் கொல்லச் சொன்னதுதான் என்றார்.

படம் வருகிறவரை இப்படிப்பட்ட பதில்கள்தான் கிடைக்கும்போல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.