நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு பலரும் தங்களுக்குத் திரையுலகில் நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக எழுதிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து சுசித்ராவின் சர்ச்சைப் பதிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று நம்பப்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதன் காரணத்தையும் சுசித்ராவுக்கு நேர்ந்துள்ளது குறித்தும் அவருடைய கணவர் நடிகர் கார்த்திக் விளக்கம் அளித்தார். இந்நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையில் அடிபட்டவர்கள் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவர் குறித்த பதிவுகளும் புகைப்படங்களும்தான் அதிகமாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில் தனுஷின் சகோதரி விமல கீதா உருக்கமாகப் பதிவு எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பம், பல்வேறு பிரச்னைகளால் மிகவும் வேதனையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு மனிதனின் கடுமையான உழைப்பாலும் தியாகத்தாலும் எங்களுக்கு உணவும் கல்வியும் நாங்கள் இன்று அனுபவிக்கும் அனைத்தும் கிடைத்தன. தேனியில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என்றால் அந்த வசதி ஓர் இரவில் வந்ததல்ல. தியாகம் எதுவும் செய்யாமலும் வந்ததல்ல. எங்கள் சகோதரர்கள் விமரிசனங்களும் அவமானங்களும் பட்டே இந்த நிலைமைக்கு வந்துள்ளார்கள்.
எங்களுக்கு எவ்விதமான ஒழுக்கங்கள் சொல்லித் தரப்பட்டன, எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்தோம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். கடின உழைப்பால் தனுஷ் இன்று மிகப்பெரிய நட்சத்திரம் ஆகியுள்ளார். ஆனால் இந்தப் புகழுக்கு விலை உள்ளது என நினைக்கிறேன். பழிவாங்கும் செயல்கள் எல்லா விதங்களிலும் சாத்தியம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் நடத்தையில் களங்கம் விளைவிப்பது சாத்தியம். ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை வருத்திக்கொள்ளும் நடிகருக்கு இதுதான் கிடைக்குமா?
ட்விட்டரில் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், பதிவு செய்யலாம் என்றாகிவிட்டது. 12 வயது சிறுவன கூட ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கமுடிகிற சமூகவலைத்தளத்தில்தான் மோசமான பாலியல் தொடர்புடைய வீடியோக்கள் வெளியாகின்றன. இதுபோன்ற மோசமான வீடியோக்களைக் கேட்கும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. எங்கள் குடும்பம் நிறைய சோதனைகளைச் சந்தித்துள்ளது. ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்வோம்.
மிகுந்த மனவேதனையுடன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலிருந்து நான் விலகுகிறேன். யாரிடமும் பேசவோ சந்திக்கவோ விருப்பம் இல்லை. இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் முதலில் நிறுத்துங்கள். ஒருவர் முக்கியமாக பெண்கள் இதன் விளைவாக சாகும் வரை சென்றால் அந்த உயிரைத் திருப்பித் தரமுடியுமா? வாழு வாழ விடு என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


