பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நடிகை ஆலியா பட்டைச் சுட்டுப் பொசுக்குவோம்: மகேஷ் பட் குடும்பத்துக்கு வந்த கொலை மிரட்டல்!

பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால் தன்னையும் தன் மனைவி சோனி ரஸ்தான், மகள் ஆலியா பட் ஆகியோரை...

News image
Updated On :2 மார்ச் 2017, 10:09 am

தொலைப்பேசி வழியாகத் தனக்குக் கொலை மிரட்டல் வந்ததாக பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நேற்று இரவு தனக்கு ஒருவர் போன் செய்தார். அப்போது, தான் அந்த நபருக்கு ரூ. 50 லட்சம் தரவேண்டும் என்றும் லக்னோவைச் சேர்ந்த ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால் தன்னையும் தன் மனைவி சோனி ரஸ்தான், மகள் ஆலியா பட் ஆகியோரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக மகேஷ் பட் கூறியுள்ளார். 

முக்கியமாகப் பணம் தர மறுத்தால் மனைவி, மகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்றும் மகேஷ் பட் மிரட்டப்பட்டுள்ளார். முதலில் இந்தத் தொலைப்பேசி அழைப்பை ஏதோ ஒரு வேடிக்கையான அழைப்பாகக் கருதியுள்ளார் மகேஷ் பட். ஆனால் பேசும்போது மிகுந்தத் தீவிரத்துடனும் மிரட்டல் தொனியுடனும் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி ஜூஹூ காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். 

தற்போது மகேஷ் பட் குடும்பத்துக்கு காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.